அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

Sports Scholarship Scheme in Tamil | விளையாட்டு வீரர் உதவித்தொகை திட்டம்

Sports Scholarship Scheme in Tamil | விளையாட்டு வீரர் உதவித்தொகை திட்டம்

Sports Scholarship Scheme in Tamil

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் பின் வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1 தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (Special Scholarship for Elite Sports persons Scheme – Elite)

2.பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (Mission International Medals Scheme – MIMS)

3. வெற்றியாளர் மேம்பாட்டு திட்டம் (Champions Development Scheme – CDS)

Read Also: CM State Youth Award in Tamil

ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள்

பொதுவான தகுதி

மாநில, தேசிய மற்றும் சர்வவேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிக்க வேண்டும்

Special Scholarship for Elite Sports persons Scheme – Elite

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (அதிகபட்சம் 5 நபர்கள் வரை)

  1. கடந்த 2 ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக்கில் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் (நான்கு ஆண்டுகளில் ஒரு முறை நடைபெறும்) பங்கு பெற்றிருக்க வேண்டும். ஆசிய விளையாட்டு போட்டி/காமன்வெல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டு காலங்களில் முதல் 8 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஒலிம்பிக்கில் தனிநபர்/ இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்

கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்

 Mission International Medals Scheme – MIMS

பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கு திட்டம்

(அதிகபட்சம் 50 நபர்களுக்கு / 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட)

  1. அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷீப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
  2. ஒலிம்பிக்/ஆசிய விளையாட்டு போட்டி/காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்
  3. 1.12.2022 அன்று 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

Champions Development Scheme – CDS

வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் (அதிகபட்சம் 100 நபர்களுக்கு மிகாமல் / 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட)

  1. அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கம்/வெள்ளிப்பதக்கம் வென்றவர்கள்
  2. 1.12.2022 அன்று 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை

இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண் ஏற்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Posts