You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

சிறப்பு டெட் தேர்வு பயிற்சி கல்வித்துறை உத்தரவு

Special TET training for government school teachers

சிறப்பு டெட் தேர்வு பயிற்சி கல்வித்துறை உத்தரவு

 

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டிசம்பர் மாதம் நடத்தப்படும் சிறப்பு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எஸ்டிஇஆர்டி சார்பில் நேரடி பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாட்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணியில் உள்ள ஆசிரியர்ளுக்கான முதலாவது சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4, 5ம் தேதிகளில் நடந்தது. இத்தேர்வை 2,15,617 பேர் எழுதினர். அவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. எனினும் தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 1.10லட்சம் பேர் தோல்வி அடைந்தனர். இவர்களுக்கு நேரடி சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார்.

Read Also: கலை திருவிழா போட்டி, ஆதிக்கம் செலுத்தும்  இந்த அரசு பள்ளி 

இந்தநிலையில், எஸ்சிஆர்டிஇ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, டிசம்பரில் நடத்தப்படும் டெட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாட்களில் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்நி நிறுவன விரிவுரையாளர்கள் மற்றும் கல்வியியல் பேராசிரியர்கள் வகுப்பு எடுப்பார்கள். 

எனவே, டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.