SNMV College Latest News | எஸ்என்எம்வி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
SNMV College Latest News
ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியலில் தொழில்சார் கணக்குப்பதிவியல் துறை சார்பில் இந்திய பொருளாதாரத்தில் startups களின் பங்கு என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தருங்கு நடைப்பெற்றது.
நிகழ்வை கல்லூரி முதல்வர் போ. சுப்பிரமணி தலைமை வகித்து நடத்தினார் மேலாண்மை இயக்குனர் P. முத்துக்குமார் அவர்கள் நிகழ்வை ஊக்குவித்து பேசினார். துறைத்தலைவர் ப சாந்தி அவர்கள் வரவேற்றுப் பேசினார். உதவி பேராசிரியர் சிந்து சிறப்பு விருந்தினரை வரவேற்றுப்பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக கேரளாவைச் சேர்ந்த தொழில் முனைவோர் விக்டர் அஷீ கிரேக் அவர்களும், சென்னை விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் காலை மற்றும் அறிவியல் புலத்தின் வணிகவியல் துறையில் உதவிப்பேராசிரியராக பணிபுரியும் ரெ காமராஜ் அவர்களும் பங்கு பெற்றனர்.
இந்திய பொருளாதாரத்தில் தொழில் முனைவோரது பங்கு அரசாங்கத்திலிருந்து கிடைக்கும் உதவி, சிறுதொழில் முனைவோர்களுக்கான பயன்பாடு, மாணவர்களின் பங்கு, திறன்,மேம்படல் எதிர்கால சவால்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்
உதவிப்பேராசிரியர் T. கண்ணன் அவர்கள் கருத்தரங்கிள் அறிக்கையை தெரிவித்தார். உதவிப்பேராசிரியர் சரண்யா அவர்கள் நன்றியுரையை வழங்கினார்
இதர கல்லூரிகளின் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும், மாணவ மாணவிகளும் பெருமளவில் பங்குப் பெற்று விழாவை சிறப்பித்தனர்.