கோவை எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எஸ்.என்.எம்.வி.அறிவியல் மன்றம் (SNMV SCIENCE CLUB) சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கட்டுரை ,ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் மாணவர்களுக்கு நடந்தது.
கட்டுரை போட்டி, "கோவிட் 19- இயற்கையின் சுயசிகிச்சை செயல்முறை" "நீடித்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல்" ஆகிய தலைப்புகளிலும் ஓவியப்போட்டியில், "குகை மனிதன் முதல் இன்றைய தொழில்நுட்ப மனிதன் வரை" "சமையலில் அறிவியல்", "காலநிலை மாற்றம்" ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெற்றன. கட்டுரைப்போட்டியில், ஆங்கிலத்துறை மாணவி கோகுல் லட்சுமி முதல் பரிசும், பயோடெக்னாலஜி மாணவி கீதாஞ்சலி இரண்டாம் பரிசும், மைக்ரோ பயாலஜி மாணவி ஏஞ்சல் கிறிஸ்டி மற்றும் பி.காம் சி ஏ மாணவர் தருண் குமார் மூன்றாம் பரிசும் பெற்றனர். அதேபோன்று ஓவிய போட்டியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி, கிருஷ்ணவேணி முதல் பரிசும், பிபிஏ மாணவி ஜெலிஸ் செல்வ ரெஜிபா இரண்டாம் பரிசும், இயற்பியல் மாணவி பூர்ணிமா மூன்றாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, கல்லூரி முதல்வர் முனைவர்.போ.சுப்பிரமணி அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார். தேசிய அறிவியல் தின நிகழ்வுகளை எஸ்.என்.எம்.வி.சயின்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேரா.க.லெனின்பாரதி ஒருங்கிணைத்தார்.