SMC Training Date 2022 | பள்ளி மேலாண்மை குழு பயிற்சி தேதி அறிவிப்பு
SMC Training Date 2022
Read Also : பள்ளி மேலாண்மை குழு முழு தகவல் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகளில் கூறியிருப்பதாவது,
பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன?
பள்ளி முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன்படி பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கான தரமான கல்வி உறுதி செய்திடவும், அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், பெற்றோர்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது என்று கல்வி உரிமை சட்டம் வலியுறுத்துகிறது. எனவே, பெற்றோர்களின் பங்கேற்பை உறுதி செய்திட மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்து, தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, குழுக்கள் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மை குழு பயிற்சி எந்தெந்த தலைப்பில நடக்கும்?

- அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் சிறப்பு அம்சங்கள்
- குழந்தைகளின் உரிமைகள்
- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பணிகளை அறியச் செய்தல்
- தரமான கல்வி
- பாலினப் பாகுபாடு
- கற்றல் விளைவுகள்
- கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள்
- பள்ளி மேலாண்மை குழு பள்ளி நிதியை பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்கள்
- பள்ளி மேம்பாட்டு திட்டம் சார்ந்த வழிகாட்டுதல்கள்
- தூய்மை பள்ளி மற்றும் நடத்தை மாற்றம் மற்றும் கற்றலில் புதுமைகள்
Read Also: பள்ளி மேலாண்மை குழு பணிகள் என்னென்ன
பள்ளி மேலாண்மை குழு பயிற்சி தேதி
அனைத்து அரசு தொடக்க முதல் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியினை மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டம், பள்ளி அளவிலான பயிற்சினை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநில பயிற்சி
மாநில அளவிலான உண்டு, உறைவிட பயிற்சி வரும் ஆகஸ்டு 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பில்லூர் மையம், மதுரையில் நடக்கிறது. இதில் BRTEs and SMC DCs
மாவட்ட பயிற்சி
மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி ஆகஸ்ட் 8 அல்லது 9 ஆகிய தேதிகளில் நடக்கும். பங்கேற்பாளர்களின் போக்குவசதிக்கு ஏற்ப மையத்தை தேர்வு செய்ய வேண்டும். மாவட்ட அளவில் உள்ள வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பங்கேற்பார்கள்.
பள்ளி அளவிலான பயிற்சி
பள்ளி அளவிலான ஒரு நாள் பயிற்சியில் ஆகஸ்ட் 11 முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சி அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடக்கிறது. இது பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.