பள்ளி மேலாண்மை குழு கூட்டம் விதிமுறைகள்
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் விதிமுறைகள்
- எல்லா கூட்டங்களிலும் குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளுதல் வேண்டும். பள்ளியின் தேவைக்கு ஏற்ப இரண்டு முறை கூட கூட்டத்தை கூட்டலாம்.
- குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை குழுக்கூட்டம் நடைபெற வேண்டும். அந்த கூட்டத்தில் பாதி உறுப்பினர்களாவது கலந்து கொள்ளுதல் வேண்டும்.
- கூட்டத்தில் விவாதித்த செய்திகளையும் நிறைவேற்றிய தீர்மானங்களையும் அறிக்கையாகத் தொகுத்து உரிய பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும்.
- குழுவின் ஒருங்கிணைப்பாளர், குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றை குறித்து தெளிவு பெற குழந்தை வல்லுநர்களைச் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கலாம்.