பட்டியலின மாணவிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படும் ஆறு கவுரவ விரிவுரையாளர்களை கல்லூரி கல்வி இயக்குனரகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் அரசு மகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கணினி அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் சில பட்டியலின மாணவிகள், சாதியை காரணம்காட்டி சில கவுரவ விரிவையாளர்கள் தங்களை இழிவாக பேசுவதாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை மாணவிகளிடம் கவுரவ விரிவுரையாளர்களிடம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்குனரகம் தமிழ் துறையை சேர்ந்த ஐந்து பெண் விரிவுரையாளர்கள் மற்றும் கணினி துறையை சேர்ந்த ஒரு பெண் விரிவுரையாளர்கள் ஆகிய ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.