சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சீதாராமன். இவர் சமீபத்தில், சேலத்தில் விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதே மாநாட்டில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில், இவர் பங்கேற்ற காெணாளி திமுகவினர் எடுத்து, கல்வித்துறைக்கு புகார் அளித்தனர். குறிப்பாக ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு எவ்வாறு கட்சிக்காரர் போல் செயல்பட முடியும் என கேள்வி எழுப்பியிருந்தனர். புகாைர கண்ட, தொடக்க கல்வி அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் இன்று மாலை அவரை உடனடியாக அலுவலகத்திற்கு வரவழைத்து விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கியுள்ளார். அதில், பள்ளிக்கு முறையாக வருவதில்லை, அதிமுக ஒன்றிய கழக செயலாளர் போல் செயல்படுவதாகவும், பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளவதாகவும் என பல்வேறு புகார்களை அடுக்கி குறிப்பாணை வழங்கப்பட்டது. அழுத்தம் காரணமாக, நாளையே அவரை பணியிடை நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.