கோவை மாவட்டம் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடக்கவிருக்கும் பத்தாம் வகுப்பு பொது தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சிரியரிடம் திங்கள் அன்று மனு அளித்திருந்தனர்.
அந்த மனுவில் மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து தற்போது வரை எந்த முடிவு எடுக்கவில்லை." மருத்துவ நிபுணர்கள் கொரோனா தாக்கம் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் உச்சத்தில் இருக்கும் என கூறிய நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையை வெளியிட்டு மாணவர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா தாக்கம் குறைந்த பின்னர், மீண்டும் மாணவர்களுக்கு திருப்புதல் நடத்திவிட்டு, அவர்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும், இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.