திருச்சி மணப்பாறை அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் அளித்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக, காவல்துறை, குழந்தை நல அலுவலர் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.Read Also: கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைபள்ளி தாளாளர் கணவர், வகுப்பறைக்கே சென்று, பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, பள்ளி சிறுமி தனது பெற்றோரிடம் புகார் அளிக்கவே, அவர்கள் பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது கண்காணிப்பு காமிரா மூலம் உறுதிசெய்யப்பட்டது. பின்னர், குழந்தையின் உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு, பள்ளியை நேற்று அடித்து நொருக்கினர்.. இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதே பள்ளியை சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டதாக இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.