மாணவிகளிடம் அத்துமீறல், ஆங்கில ஆசிாியர் ஓட்டம்
தர்மபுரி அரசு பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. விடுமுறை எடுத்துக்கொண்டு தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரியி் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பேட்டை என்ற பகுதியை சேர்ந்த 12 வயது மாணவி 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்ா பள்ளியில் பணியாற்றும் ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர், அந்த மாணவியிடம் கையெழுத்து சரியில்லை எனக்கூறி, தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதேபோல் பல மாணவிகளிடம் அத்துமீறி தொடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக, ஒரு மாணவி தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக, அவர் பள்ளிக்கு வரவில்லை. விடுமுறை எடுத்து, தலைமறைவான ஆசிரியர் பன்னீர் செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.