கலை அறிவியல் கல்லூாிகளுக்கு, உதவி பேராசிாியர்கள் தேர்வு செய்வதற்காக தமிழக அரசால் நடத்தப்படும் தகுதித்தேர்வான செட் தேர்வு, இனி ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்தப்பட இருந்த செட் தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, பின் நிறுத்தப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக அந்த தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி கணினி வழியில் நடத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, தற்போது நடத்தப்பட்டுள்ள தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் 4,000 உதவி பேராசிாியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு இருமுறை செட் தேர்வு நடத்தி, உதவி பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.