You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கணினி வழியில் செட் தேர்வு நடத்த பட்டதாரிகள் எதிர்ப்பு

Ramiyampatti school teacher suspend

தமிழக அரசின் உதவி பேராசிரியர் தகுதி தேர்வு ஏற்பாடுகளில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டதால், அதை ஓஎம்ஆர் தாள் தேர்வாக மாற்ற வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கோாிக்கை விடுத்துள்ளனர். 

நாடு முழுவதும் உள்ள முதுநிலை பட்டதாரிகள், கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு பிஎச்டி முடித்திருக்க வேண்டும். பிஎச்டி இல்லாதவர்கள், நெட் அல்லது செட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வை மத்திய அரசும், செட் தேர்வை மாநிலம் அரசு நடத்துகிறது. 

இந்த ஆண்டு தமிழகத்தில் செட் தேர்வை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் இந்த மாதம் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தேர்வு நடப்பதாக இருந்தது. விண்ணப்பங்கள் இணைய வழியாக பெறப்பட்டு, தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் கணினி தேர்வாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டது. பல்வேறு தொழில்நுட்ப பிரச்னையால் தேதி குறிப்பிடாமல் செட் தோ்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பேராசிரியர்கள் அமைப்பான நெட், செட் சங்கத்தின் பொதுச்செயலர் தங்க முனியாண்டி ெவளியிட்ட அறிக்கை, 

தமிழக அரசு நடத்தும் செட் தேர்வுக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.  கணினி வழி தேர்வாக நடத்த சாத்திய கூறுகள் இல்லை, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. எனவே, மத்திய அரசின் யுஜிசி நடத்துவது போல், எழுத்து வடிவில் ஒஎம்ஆர் தாளில் நடத்துவதே சரியானது. 

மேலும், தேர்வுக்கு எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பாட வாரியாக தேர்வு எழுதியவா்கள் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும், இவ்வாறு அதில் ெதரிவிக்கப்பட்டுள்ளளது.