You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கோடை கால அறிவியல் முகாம் மே 7ல் துவக்கம்

Coimbatore regional Science center summer camp

கோவை மண்டல அறிவியல் மையத்தில் மே 7ம் தேதி முதல் கோடை கால அறிவியல் முகாம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, முதலில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மண்டல அறிவியல் மையத்தில் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக அறிவியல் வானியல் உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு, செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் அறிவியல் குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக கோடை கால அறிவியல் முகாம், இம்மையத்தில் நடத்தப்படுகிறது. அதன்படி வானியல் கருவி வடிவமைப்பு பயிற்சி மே 7ம் தேதியும், அறிவியல் முகாம் 16, 17ம் தேதிகளிலும் நடைபெறகிறது. 

ஒளியியல் நுண்ணோக்கி பயிற்சி மே 13ம் தேதியும், கேம் டெவலப்மென்ட் வித் பிளாக் கோடிங் மே 9, 10ம் தேதிகளிலும், 3டி மாடலிங் அண்ட் பிாிண்டிங் குறித்த பயிற்சி முகாம் மே 19, 20ம் தேதிகளிலும் நடக்கிறது. முகாமன்று, அதிகபட்சமாக 50 மாணவர்கள், அதுவும் நேரில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. 

மிகவும் குறைந்த நுைழவு கட்டணத்துடன் இம்முகாம் நடைபெறுகிறது. விபரங்களுக்கு 0422-2960326, 2963024, 85239 09178 ஆகிய எண்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட அறிவியல் அலுவலர் (பொ) சுடலை தெரிவித்துள்ளார்.