பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈகை பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்க கோரி, சட்டமன்ற உறுப்பினர்கள், பொது மக்களிடம் இருந்து அரசு கோரிக்கை வரப்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, உதவிெபறும், தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 10.04.2024 அன்று நடைபெறுவதாக அறிவியல் தேர்வு 22.4.2024ம் தேதிக்கும் 12.4.2024 அன்று நடைபெறுவதாக இருந்த சமூக 23.4.2024 தேதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.