You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

ஏன் பள்ளிகள் தற்போது திறக்கக்கூடாது? - ஆசிரியர் நல கூட்டமைப்பு விளக்கம்

ஏன் பள்ளிகள் தற்போது திறக்கக்கூடாது? - ஆசிரியர் நல கூட்டமைப்பு விளக்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்ட அறிக்கை:

கொரோனா கொடுந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பல கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டு, இதுநாள் வரை நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு வரும் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்து மற்றும் 9, 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், வரும் 16ம் தேதி பள்ளிகள் திறக்கலாமா? அல்லது திறக்கக் கூடாதா? என்று 09.11.2020 அன்று அந்தந்த உயர்நிலைப்பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.

இதில், கொரோனா தொற்று அச்சம் காரணமாகவே பெரும்பாலான அரசு பள்ளிகளில் 25% விழுக்காடு பெற்றோர்கள் கூட
கூட்டத்திற்கு வரவில்லை. இது எதனை காட்டுகிறது என்றால் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுவதையே காட்டுகிறது.

வருகின்ற காலம் மழை மற்றும் குளிர்காலம் என்பதால் தொற்று எளிதில் பரவ வாய்ப்பு இருக்கும் என்ற அச்சமே பெற்றோர்கள் மத்தியில் இருக்கிறது.

தமிழக முதல்வர் அவர்கள் மாணவர்களின் நலன் கருதி மழை மற்றும் குளிர்காலம் என்பதால், தொற்று பரவ வாய்ப்பாக அமையும் என்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

To receive education news instantly pls subscribe www.tneducationinfo.com /follow facebook page tneducationinfo and twitter.