செய்திக்குழு - பதிவு நேரம் 5:00 pm
பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பள்ளி திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய, நோட்டு புத்தகங்கள், காலணி உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னை முடிந்தபிறகு மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கப்பட்ட பின் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆய்வு நடத்திய பின்னர் பள்ளி திறப்பு தேதி குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.