தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குன் பின் மீண்டும் பள்ளி திறப்பது ஒரிரு நாட்கள் தள்ளி போகலாம் என தகவல் வௌியாகி உள்ளது.
பொது தேர்வுக்கு பின், மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பது வழக்கம். இந்த ஆண்டும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 1ம் தேதி சனிக்கிழமை தேதியில் வருவதால், ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி இன்று மக்களவை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், ஜூன் 5ம் தேதி அல்லது ஜூன் 6ம் தேதியே பள்ளி திறக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.