திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசு பேருந்து மோதியதில், பள்ளி மாணவர் ஒருவர் உயரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுறுடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (17). சிறுகுடியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் நத்தத்தில் இருந்து, சிறுகுடி நோக்கி சென்றபோது, மெய்யம்பட்டி அருகே சிங்கம்புணரியிலிருந்து நத்தம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. படுகாயமடைந்த, அவர் நத்தம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் குழந்தைகள் இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதி கிடையாது. தற்போது நவீன பெற்றோர் பெருமையாக கருதி, தங்கள் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் தருவதும், சாலை விபத்தில் அவர்கள் உயிரை மாய்ப்பதும் அதிகரித்து வருகிறது. பள்ளி குழுந்தைகள் இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர். மாறாக, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சாலை பாதுகாப்பு விதி குறித்து அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.