School Student Smart Card | பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் கார்டு பயன்
School Student Smart Card
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு, தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அவ்வப்போது, புதிய புதிய நலத்திட்ட அறிவிப்புகளும் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் ஜூன் 1ம் தேதி, 2018ம் ஆண்டு, மாணவர்களுக்கு புதிய திறன் அட்டை எனப்படும்
‘Smart Card’ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்றைய வருடமே, Smart Card’ கார்டு மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அவரது பெற்றோர்கள் மற்றும் ஏன் ஒரு சில ஆசிரியர்களுக்கும் இதன் பயன்பாடு என்னவென்று தெரியாமல் உள்ளனர்.
Also Read: தமிழ்நாடு மாநில குழந்தைகள் கொள்கை 2021
Smart Card பயன் அறிந்துகொள்வோம்:
இந்த திறன் அட்டையில் உள்ள க்யூ ஆர் கோடு
(Quick Response Code) அல்லது பார்கோடு வைத்து, சம்மந்தப்பட்ட மாணவரின் அனைத்து தகவல்களையும், எமிஸ் எனப்படும்
கல்வி தகவல் மேலாண்மை முகமையின் மூலம், இணையதளம் வாயிலாக பெற முடியும்.
இந்த திறன் அட்டை மூலம், பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளியில் படிக்கிறாரா அல்லது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டாரா என அதிகாரிகள் எளிதாக கண்டறிந்து, அந்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவியாக இருக்கும்.
ரத்தப்பிரிவு சார்ந்த விவரம் இந்த திறன் அட்டையில் இருப்பதால், மாணவர்களுக்கு எதிர்பாராத வகையில் விபத்து ஏற்படும்போது, சிகிச்சைக்காக ரத்தம் தேவைபடும் பட்சத்தில், ரத்தப்பிரிவு அறிந்துகொள்ள முடியும்.
இந்த அட்டை மூலம் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.
எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
அதே கல்வியாண்டில், பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள 37,358 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 46,60,965 மாணவர்களுக்கும், அதே போன்று 8,386 அரசு உதவிபெறும் மற்றும் பகுதி உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 23,99,017 மாணவர்களுக்கு திறன் அட்டை வழங்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழக அரசு ரூ
.12.70 கோடி நிதி ஒதுக்கியிருந்தது. இந்த அட்டை
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் இந்த அட்டைகள் அச்சடிக்கப்பட்டது.
திறன் அட்டையில் உள்ள விபரங்கள்:
- மாணவர்களின் பெயர் (Name)
- மாணவர்களின் ஆளறிதழ் (Student ID)
- பிறந்த தேதி (Date of Birth)
- தந்தையின் பெயர் (Father’s Name)
- முழு முகவரி (Complete Address)
- பள்ளியின் பெயர் (Name of the School)
- திறன் அட்டை வழங்கப்பட்ட ஆண்டு (Card issues Year)
- மாணவர்கள் புகைப்படம் (Photograph of the student)
- இரத்த வகை (Blood Group)
- எமிஸில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரங்கள் பார்கோடு அல்லது க்யூ ஆர் கோடு (Bar code or QR Code)