திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் வக்கீல் மனோஜ் இம்மானுவேல் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மருத்துவம், இன்ஜினியரிங் தவிர்த்து மற்ற உயர் படிப்புகளை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு, தேவையான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி வழங்குவதற்கு போதுமான வசதி, வழிகாட்டுதல் இல்லை. குடிமைப்பணி, நிர்வாக, மேலாண்மை, சட்டம் உள்ளிட்ட பலதுறைகள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்கல்வியில் பிறதுறை சார்ந்த படிப்புகளுக்கான நுழைவு தேர்வு குறித்து தெரியப்படுத்தவும், அதற்கான பயிற்சி மையங்களை உருவாக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், “பிற துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து தமிழக மாணவர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசின் வேலைவாய்ப்புக்கு கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது இல்லை, பல மாணவர்கள் பள்ளி பருவ காலத்திலேயே மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளாக தமிழகத்தை சேர்ந்த பல இருந்தனர். தற்போது விண்ணப்பிக்கக்கூட பலர் முன்வருதில்லை. அரசு மட்டுமின்றி, அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்குகளாக பார்க்காமல், வருங்கால தலைமுறையினருக்கான வாய்ப்புகளை பயன்படுத்தி, அவர்களை உருவாக்கும் பணியிலும் அரசியில் கட்சியினர் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டுமு், என்று கூறி தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரம் தள்ளி வைத்தனர். Read, Comment, and Share. To receive education information promptly subscribe to www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/ ShareChat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com.