பள்ளி திறப்பு குறித்து மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்ட நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதற்கான தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்படி வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதிகளில் கருத்து கேட்பு கூட்டம் பள்ளியில் நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் கருத்து கேட்பு விவரத்தினை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் எனவும் மற்றும் எவ்வித பிரச்னையின்றி கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.