பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கேட்ட கருத்து அடிப்படையில் 70 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதால், பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து, கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தி பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவிக்க உள்ளதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், 70 சதவீதம் பேர் பள்ளி திறப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளதாக இதுவரை பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியிடவில்லை. டிஎன்பிஎஸ்சி பெயரில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோருக்கு போலி பணி நியமனம் வழங்கி மோசடி செய்து பல கோடி ரூபாய் வசூலித்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, புளியந்தோப்பு ஆசிர்வாதபுரம் பகுதியை சேர்ந்த நாகேந்திரராவ், அவரது நண்பர் தண்டையார்பேட்டை ஞானசேகர் ஆகியோரை கைது செய்துள்ளனர். போலி நியமன ஆணை, போலி முத்திரைகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களை தங்கள் வலையில் வீழ்த்தி அரசு பணி பெற்றுதருவாக 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ.6 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் வசூல் செய்துள்ளனர். வேலை வாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளலாம் எனவும், தேவையான ஆவணங்கள் கொண்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அடுத்துள்ள தமிழக- கர்நாடக எல்லையில் குண்டல்பேட்டை செல்லும் சாலையில் கர்நாடக மாநில அரசு மருத்துவ கல்லூரியில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, கல்லூரி மாணவர் விடுதியில் புகுந்து அங்குமிங்குமாக நடமாடியுள்ளது. பின்பு அங்கிருந்து வெளியேறியது. இதன் காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இதைகண்ட கல்லூரி நிர்வாகத்தினர் பீதியடைந்தனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாகர்கோவிலில் வீட்டிக்கு நடந்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியையிடம் நான்கரை பவுன் நகையை பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.