Table of Contents
What is the School Management Committee Audit ? பள்ளி மேலாண்மை குழு சமூக தணிக்கை என்றால் என்ன?
தணிக்கை என்பது மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் சட்டங்கள், திட்டங்கள், செலவினங்கள், செயல்பாடுகள், கட்டுமானப் பணிகள் முதலியவற்றின் நிலைமைகளையும், பலன்களையும் பற்றிய உண்மை நிலை என்னவென்பதைக் கள ஆய்வு செய்து சரிபார்த்தல் ஆகும். இந்த ஆய்வை உரிய பயனாளிகள் மூலம் நடத்துவதே ‘சமூகத் தணிக்கை’ ஆகும்.
- சமூகத் தணிக்கைக் குழு உறுப்பினர்கள்.
- சமூகத் தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டியவை.
- சமூகத் தணிக்கையில் சமுதாய பங்கேற்பு மற்றும் வழிகாட்டுதல்கள்.
- சமூகத் தணிக்கையை எங்கு, எப்போது, யாரிடம் மேற்கொள்வது?
- அறிக்கையைத் தொகுத்தல் மற்றும் தொடர்பணி.
சமூகத் தணிக்கைக் குழு உறுப்பினர்கள் யாா்?
1 பெற்றோர் ( SMC உறுப்பினர் அல்லாதவர்) ஒருவர்
2 பெற்றோர் ( SMC தலைவர் /உறுப்பினர்) ஒருவர்
3 நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த SMC உறுப்பினர் ஒருவர்
4 கிராமக் கல்விக்குழுத் தலைவர் / உறுப்பினர் – ஒருவர்
5 உள்ளாட்சி அமைப்பின் தலைவர் /உறுப்பினர் – ஒருவர்
6 தலைமையாசிரியர்
7 உதவி ஆசிரியர்- ஒருவர்
சமூகத் தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டியவை
• இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009.
• அரசின் நலத்திட்டங்கள்.
• பள்ளிக் குடியிருப்புக்கு உட்பட்ட பகுதியின் மக்கள் தொகை, பள்ளி வயது குழந்தைகள்
மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளின் விவரம்.
• பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்புகள்.
• நிதிப்பயன்பாட்டு விதிமுறைகள்.
• சுகாதார விழிப்புணர்வு.
• பள்ளியில் தற்போது நடைமுறையில் உள்ள கற்றல் கற்பித்தல் முறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள்.
• பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் உட்கூறுகள்.
சமூகத் தணிக்கையில் சமுதாய பங்கேற்பு மற்றும் வழிகாட்டுதல்கள்
சமூகத் தணிக்கை முறையைத் திட்டமிடல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் சரி செய்தல் ஆகிய மூன்று கட்டங்களாக செயல்படுத்தலாம். சமூகத் தணிக்கையை நடைமுறைப்படுத்தும் முன், பெரிய அளவில் சமூகப் பங்கேற்பை உறுதி செய்தல் வேண்டும். பள்ளிகள், சட்டத்தால் வரையறுக்கப்பட்ட கண்காணிப்பாளர்களால் உள்ளூர் அளவில் கண்காணிக்கப்படுதல் அவசியமானது. அப்போதுதான் திட்டங்களின் முழுப்பயன் உரிய பயனாளர்களைச் சென்றடையும்.
சமூகத் தணிக்கை வழிகாட்டுதல்கள்
ஒருங்கிணைந்த கல்வி மற்றும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 சமூகத் தணிக்கையைச் செயல்படுத்த ழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
1. சமூகத் தணிக்கைப் படிவங்கள் பற்றி முழுமையாக அறிந்திருத்தல் நன்று.
2. சமூகத் தணிக்கையை மேற்கொள்வதற்கு முன்பு, கல்வி உரிமைச் சட்டம் குறித்து
அறிந்திருக்க வேண்டும்.
3. தலைமையாசிரியர், சமூகத் தணிக்கையின்போது பள்ளிப் பதிவேடுகள், கணக்குப்
பேரேடுகள், தேவைப்படும் பிற ஆவணங்களைப் பார்வைக்குக் கொண்டு வரவேண்டும்.
4. பள்ளியின் நிதி மற்றும் கணக்கு விவரங்களைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், சமூகம் மற்றும் ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொண்டதை ஆய்வு செய்யவேண்டும்.
5. பள்ளியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளைச் சமூகத் தணிக்கைக் குழு கவனத்தில் கொள்ளவேண்டும்.
6. மக்களை ஊக்கப்படுத்துவதன்மூலம் அவர்களுக்கு ஏற்படும் ஐயங்களைச் சமூகத்
தணிக்கைக் குழுவினரிடம் கேட்டுத் தெளிவுபெற வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும்.
7. பள்ளியின் அன்றாடச் செயல்பாடுகள் திறம்பட அமைய சமூகத் தணிக்கையின் ஆய்வு முடிவுகளைக் கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் கிராம சபைக் கூட்டங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
8. சமூகத் தணிக்கைமூலம் கண்டறியப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வசதியாக தொடர்புடையவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். அறிக்கை தொகுத்தல் மற்றும் தொடர் பணி சமூகத் தணிக்கையில் உள்ள முக்கியத் தலைப்புகளின் அடிப்படையில் அறிக்கைத் தயார் செய்யவேண்டும். அறிக்கையை எழுதும்போது படிவத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் மட்டுமே எழுதவேண்டும். தனிப்பட்ட கருத்துகளை அதில் சேர்க்கக் கூடாது.
சமூகத் தணிக்கையை எங்கு, எப்போது, யாரிடம் மேற்கொள்வது?

அறிக்கையைத் தொகுத்தல் மற்றும் தொடர்பணி.
சமூகத் தணிக்கையில் உள்ள முக்கியத் தலைப்புகளின் அடிப்படையில் அறிக்கைத் தயார்
செய்ய வேண்டும். அறிக்கையை எழுதும்போது படிவத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில்
மட்டுமே எழுதவேண்டும். தனிப்பட்ட கருத்துகளை அதில் சேர்க்கக் கூடாது.
• பள்ளிக் கட்டமைப்புக்கு தேவையான வசதி குறித்த குறிப்புரை
• நிதிப்பயன்பாடு குறித்த மதிப்பீடு
• புகார்கள் பற்றிய குறிப்புரை
அறிக்கையைத் தயார் செய்த பின்பு, முதலில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உரிய முடிவுகள் எடுக்கவேண்டும். அதன்பின், ஆய்வில் கண்டறியப்பட்ட சிக்கல் மற்றும் பிரச்சினைகளைக் கீழ்க்காண்பவர்களுள் உரியோர்களுக்குத் தெரிவித்துத் தீர்வுக் காண வேண்டும்.
• தலைமையாசிரியர்
• ஆசிரியர்கள்
• பெற்றோர்கள்
• உள்ளாட்சி உறுப்பினர்கள்
• மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
• மாவட்டக் கல்வி அலுவலர்கள்
• வட்டார வளர்ச்சி அலுவலர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள்
• வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள்
• மதிய உணவுப் பொறுப்பாளர்
• பள்ளி அமைந்துள்ள ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில்
அறிக்கையைச் சமர்ப்பித்துத் தீர்மானத்தை இயற்றி, அரசின் கவனத்திற்குக்
கொண்டு செல்லலாம்.
• மாவட்ட ஆட்சித் தலைவர்
• பள்ளிக் கல்வித்துறை
சமூகத் தணிக்கையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு
• சமூகத் தணிக்கையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கினைப் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
• அதனை முறையாக மேற்கொள்ளச் செய்தல்.
• முழுமையாக மேற்கொண்ட பிறகு அறிக்கையை ஒப்படைத்திடவும் அதன்மூலம்
மாணவர் பயன்பெற்று கற்றல் அடைவைப் பெற உதவுதல்.
Conclusion
இந்த பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |