பள்ளி மேலாண்மை குழு தேர்வு செய்யும் முறை What is the School
பள்ளி மேலாண்மை குழு தேர்வு செய்யும் முறை
1.அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும்.
2.குழு உறுப்பினர்களில் நான்கில் மூன்று பகுதியினர் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களாக இருக்க வேண்டும்.
3.ஒடுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு குழுவில் விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்ஒடுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு குழுவில் விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
4.குழு உறுப்பினர்களில் பாதிப் பேர் பெண்களாக இருக்க வேண்டும். (10 பேர்).
5.மீதமுள்ள உறுப்பினர்கள் கீழ்கானும் தரப்பினராக இருக்க வேண்டும்:
READ ALSO : பள்ளி மேலாண்மை குழு பணிகள் என்னென்ன?
அ). இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதியாக இருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும். உள்ளூர் அதிகார மையம் யார் உறுப்பினர்கள் என்பதை முடிவு செய்யலாம்.
ஆ). பள்ளி ஆசிரியர்களில் இருந்து இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதில் ஒருவர் பள்ளி தலைமை ஆசிரியராக இருக்க வேண்டும்.
இ). ஓர் உறுப்பினர் உள்ளூர் கல்வியாளர், புரவலர்/ தன்னார்வ அமைப்பினர் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஆகியோரில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும். இதனை குழுவில் உள்ள பெற்றோர்களை முடிவு செய்யலாம்.அரசு பள்ளியாக இருந்தால், குழுவின், தலைவராகக் குழு உறுப்பினர்களில் பெற்றோர் பிரதிநிதியில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
6.அரசு உதவி பெறும் பள்ளியாக இருந்தால், பள்ளியின் மேலாளர் / தாளாளர்/ செயலர் அவர்கள் நியமிக்கும் நபர் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவராக இருப்பார்.
7.குழுவின் துணைத் தலைவராக சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோர்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
8.குழுவின் துணைத் தலைவராக சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோர்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
9.பள்ளி தலைமை ஆசிரியர், பதவி வழி பொறுப்பின் காரணமாக குழுவிற்கு வழிகாட்டுபவராக இருப்பார்.
10.ஒரு பஞ்சாயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களில் உறுப்பினராக இருக்கக்கூடாது.