அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
34.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

School Inspire Award in Tamil | இன்ஸ்பயர் விருது என்றால் என்ன

School Inspire Award in Tamil | இன்ஸ்பயர் விருது என்றால் என்ன

School Inspire Award in Tamil

பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை  (DEPARTMENT  OF SCIENCE AND  TECHNOLOGY-DST) 2008  ஆம் ஆண்டு முதல் INSPIRE இன்ஸ்பயர் விருது வழங்கி வருகிறது.

2016  ஆம் ஆண்டு முதல் புத்தாக்க அறிவியல் ஆய்வு MANAK என்ற பெயரில் வழங்கி வருகிறது. INNOVATION IN SCIENCE PURSUIT FOR INSPIRED RESEARCH (INSPIRE) – MILLION MINDS AUGUMENTING NATIONAL ASPIRATIONS AND KNOWLEDGE (MANAK)  ஆனது DST  இன் முதன்மையான செயல்திட்டங்களில் ஒன்றாகும்.

DST இன் தன்னாட்சி நிறுவனங்களில் ஒன்றான NATIONAL INNOVATION  FOUNDATION (NIF) உடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது . இது 6  ஆம் வகுப்பு முதல் 10  ஆம் வகுப்பு வரை படிக்கும்  (10 வயது முதல் 15  வயது  வரை ) உள்ள மாணவர்களின் புத்தாக்க அறிவியல் திறனை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. பள்ளி மாணாக்கர்களிடையே படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனை கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதற்காக அறிவியல் மற்றும் சமூக பயன்பாடுகளில் வேரூன்றியுள்ள ஒரு மில்லியன் புதிய யோசனைகளை  புதுமைகளை வெளிக்கொணர்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தேர்வு செய்யப்பட்ட புத்தாக்க படைப்புகளை வெளிப்படுத்தும் மாணவர்களின் நேரடி வங்கி கணக்கிற்கு ரூ.10000 வழங்கப்படும் .

இன்ஸ்பயர் – மானக் விருதிற்கு படைப்புகளை / புத்தாக்க யோசனைகளை தேர்வு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்

  • NOVELTY – புதுமையான படைப்புகள்
  • SOCIAL APPLICABILITY – சமுதாயத்திற்கு பயன்படும் விதமாக ,பொருந்தும் விதமாக இருத்தல்
  • COMPETITIVE ADVANTAGES OVER EXISTING TECHNOLOGIES -தற்சமயம் பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக இருத்தல் வேண்டும்
  • COST EFFECTIVENESS – குறைந்த செலவில் தயாரான படைப்புகள்
  • USER FRIENDLINESS – கையாள்வதற்கு எளிமையாக இருத்தல்
  • சென்ற வருடம் பயன்படுத்திய படைப்புகளை பயன்படுத்தக்கூடாது
  • படைப்புகளை பதிவு செய்யும் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
  • பதிவு செய்யும்போது ஆடியோ/வீடியோ வாக பதிவு செய்யலாம்.
  • மாணவர்களின் வங்கி கணக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருத்தல் அவசியம்.
  • மாணவர்களின் பெயர் வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ளது போல பதிவு செய்தல் மிகவும் அவசியம்

பள்ளிகள் செய்ய வேண்டியன

  • குழுக்களாக மாணவர்களை பிரித்து எதைப்பற்றி படைப்புகள் உருவாக்கலாம் என்ற யோசனைகளை கேட்டு உரையாடல் நிகழ்த்த வேண்டும்.
  • அப்படி பெறப்பட்ட யோசனைகளில் புதுமையான ஒரு கருவி, ஏற்கனவே உள்ள கருவியில் மேம்பாடு செய்தல், நிகழ்கால சூழலில் உள்ள ஒரு பிரச்னைக்கு தீர்வாக அமையும் யோசனைகளை தேர்வு செய்யலாம்.
  • அனைத்து யோசனைகளையும் சேகரித்த பின்பு தலைமை ஆசிரியரும் மற்ற அறிவியல் ஆசிரியர்களும் கலந்து ஆலோசித்து சிறந்த ஒன்றை தேர்வு செய்யலாம்.
  • அன்றாடம் சுற்றுப்புறத்தில் நிகழும் நிகழ்வுகளை உற்றுப்பார்த்து கவனித்து அறிவியல் பூர்வமான தீர்வுகளை கண்டுபிடிக்க கூற வேண்டும். இதனால் அருமையான சமூக பயன்பாடுமிக்க நல்ல படைப்புகள் உருவாகும்.

2023-2024 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான பதிவுகள் 2023 மே 1 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. அனைத்து விதமான பள்ளிகளில் இருந்தும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் மே 1 முதல் ஆகஸ்டு 31 வரை பதிவு செய்யலாம். 

தமிழகத்தில்  த‌மி‌ழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (TAMILNADU SCIENCE AND TECHNOLOGY CENTRE) இன்ஸ்பயர்  நிகழ்வை ஒருங்கிணைக்கும் தொடர்பு மையமாக செயல்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் ஆகஸ்டு 31 க்குள்  மாணாக்கர்கள்  புதிய யோசனைகளை / புத்தாக்க அறிவியல் சிந்தனைகளை பள்ளிகள் மூலமாக பதிவு செய்யலாம்.

  • – க. லெனின்பாரதி 
  • அறிவியல் தொடர்பாளர்
  • இயற்பியல் பேராசிரியர் 
  • கோவை

Related Articles

Latest Posts