School Holidays | பள்ளி கல்லூரிகளுக்கு திடீர் விடுமுறை
School Holidays
மேற்குவங்கம் மாநிலத்தில் கடும் வெப்பம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதனுடன் கல்வி நிலையங்களுக்கு ஒரு வார காலம் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பல பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்ப அலை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் உட்பட கல்வி நிலையங்களுக்கு நாளை முதல் சனிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் 12 முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில், டெல்லி, பஞ்சாப்், ஹரியானா ஆகிய மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read Also: பயிற்சியா ? பரீட்சையா – குழப்பத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள்
தமிழ்நாடு
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொளுத்தும் வெயில் காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முன்கூட்டியே நடத்தப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.