School Holiday on January 18? | பள்ளி கல்லூரிகள் 18ம் தேதி விடுமுறையா ?
School Holiday on January 18?
பொங்கல் விழா முன்னிட்டு, தமிழக அரசு வரும் 18ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக செய்தி பரவிவருகிறது. இதன் உண்மைதன்மை அறியாமல், ஆசிரியர்கள் வாட்ஸப் குரூப்களில் பலர் பரப்பிவந்தனர். அதே சமயத்தில், தமிழக அரசு சார்பில் எந்தவிதமான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
Read Also: அரசு பள்ளியில் ஆசிரியர் பணி, சூப்பர் சம்பளம் உடனே அப்ளை பண்ணுங்க
குறிப்பாக, வேண்டுமென்றே சிலர் 18ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளதாக கூறி இந்த போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது. இதற்கு தீர்வளிக்கும் வகையில், சென்னை புத்தக கண்காட்சியில், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்மொழியிடம், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, 18ம் தேதி பொதுவிடுமுறை இல்லை என்றும், பள்ளிகள் செயல்படும் என்றும், தந்தி செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.