School holiday in November 14 | பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
School holiday in November 14
கனமழை எச்சரிக்கை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கன மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதால், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி சற்று முன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். விதிமீறி பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கினால், நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சாித்துள்ளார்.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கடலூர் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.