சென்னையில், பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி குறித்து பேசும்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட உதவிகள் பள்ளி திறந்தவுடன் வழங்கப்படும் எனவும், பள்ளிக்கு மாணவர்கள் வராவிட்டாலும் அவர்களுக்கான சீருடைகள், சைக்கிள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில், அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவுகளை அறிவிப்பார். நடப்பு கல்வியாண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர் கூறினார்.மேலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு நடத்தப்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் குறித்து மாணவர்களுக்கு தெரிவித்துபின், அதற்கு பிறகுதான் முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அதற்கான அட்டவணை அறிவிக்கப்படும். பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில், தமிழக அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ளதால், அதுகுறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் கூறினார்.தேனி உத்தமபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தமிழ் ஆசிரியாக பணியாற்றுபவர் சேகர் (52) அவரது குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டிருந்த போது, அப்போது அவரது வீட்டின் முன்பு மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் அனைவரும் அலயறிடித்து வெளியே வந்த பாார்த்தபோது, மா்மநபர் ஒருவர் பைக்கில் அங்கிருந்து தப்பியது பார்த்தனர். இதில் ஒன்று மட்டும் வெடித்த நிலையில், மற்ற இரண்டு குண்டுகள் வெடிக்காமல் சிதறியது. தடவியல் நிபுணர்கள் குண்டு வீசிய இடத்தை ஆய்வு செய்தனர். சேகருக்கு ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.காரைக்குடி பாரதிநகர் மன்ற நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், கடந்த 24ம் தேதி ஆசிரியர்கள் பள்ளியை மூடிவிட்டு சென்றனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த பார்த்தபோது, தலைமை ஆசிரியர் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த மூன்று லேப்டாப், பயோமெட்ரிக் உபகரணம், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மயிலாடுதுறையில் முத்து வக்கீல் சாலையில் வாடகை கட்டிடத்தில் கயாலான் கடை நடத்தி வருபவர் பெருமாள்சாமி, இவரது கடையை காலி செய்வதற்கு நீதிமன்ற உத்தரவுபடி நேற்று காலஅவகாசம் முடிந்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை ஆர்டிஓ மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று கடையை காலி செய்யும் உத்தரவு வாசலில் நேற்று ஒட்டினர். அப்போது அதிகாரிகள் பார்வையிட்ட போது, கிடங்கின் ஒரு பகுதியில் 2019-20ம் கல்வி ஆண்டிற்கான புதிய பாட புத்தகங்கள் பண்டல், பண்டலாக குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தொிவித்தனர். புகாரின் பேரில், பெருமாள்சாமி கைது செய்யப்பட்டு, எப்படி புத்தகம் கிைடத்தது? யார் விற்றது? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தலைசிறந்த வீரர் என இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி இரட்டை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு்ள்ளார். முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது கிடைத்துள்ளது.