செங்கோட்டையன் தமிழகத்தின் பள்ளி கல்வி மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக உள்ளார். எத்தனையோ பேர் கல்வி அமைச்சராக பதவி வகித்தபோதும், இவருக்கு என்று தனி இடம் உண்டு.
குறிப்பாக, இவர் கல்வி அமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு, மாணவர்கள் தரவரிசையை முறையை ஒழித்தார். அதாவது, ஒவ்வொரு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவின்போது, பெருமளவு தனியார் பள்ளி மாணவர்கள், ஒரு சில அரசு பள்ளி மாணவர்கள் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாவது இடம் மதிப்பெண் அடிப்படையில் இடம்பிடிப்பார்கள். தரவரிசையாக அவர்களது பெயர் இடம்பெறுபோது, அதே நாளில் ஊடகங்களிலும், அடுத்த நாள் நாளிதழ்களிலும் தரவரிசை பெற்ற மாணவ, மாணவிகளின் அலங்கரிப்பார்கள்.
இதையே வைத்து, கல்வி நிறுவனங்கள் விளம்பரமாக நாளிதழ் மற்றும் ஊடகங்களில் இடம்பெறச் செய்து கல்வி நிறுவனங்களின் பெருமையை தம்பட்டம் அடிப்பார்கள். தற்போது, அது ஓழிக்கப்பட்டதால், தேர்வு வெளியாகும்போது, மாணவர்கள் மீதான உளவியல் ரீதியான தாக்குதல் தடுக்கப்பட்டு கூல் ஆக உள்ளனர்.
அடுத்ததாக, வலுவான புதிய பாடத்திட்டம், அந்த பாடத்திட்டத்தில் க்யூஆர் கோடு சிறப்பம்சம், 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு, கல்வித்துறைக்கு ஓரு கமிஷனர், மதிப்பெண் 1200 லிருந்து 600க்கு மாற்றம், கல்வி தொலைக்காட்சி உள்ளிட்டவை அவரது ஹிட் லிஸ்டில் உள்ளது.
அதே சமயத்தில், இவர் இருந்தபோது, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது வழக்கு, ஆசிரியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகள் ஆசிரியர்களை அதிர வைத்தது, 5, 8ம் மாணவர்களுக்கு பொது தேர்வு பதபதைப்பு, இடைநிலை ஆசிரியர்களை, எல்கேஜி, யுகேஜிக்கு மாற்றம, இறுதிகட்டத்தில் வலுவற்ற நிர்வாகம் உள்ளிட்டவை ஆசிரியர்கள் மத்தியில் பேட் லிஸ்டில் உள்ளது.
தற்போது, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கோபி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளார், அதிமுக தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்து உள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன் பயோடேட்டா…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன். அஇஅதிமுக கட்சியை சேர்ந்த இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக 1977ல் சத்திய மங்கலத்திலிருந்தும், அதன் பிறகு 8 முறை கோபி செட்டிபாளையத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி பிரிந்திருந்த நிலையில், ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்றார்.
போக்குவரத்து, விவசாயம், வனத்துறை, தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட துறைகளில் அமைச்சர் பதவிகளை வகித்தவர். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்று தற்போது வரை கவனித்து வருகிறார். (சோா்ஸ், விக்கி)
பள்ளி கல்வித்துறையில் தேவையான மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம், அடுத்து அமையவிருக்கும் அரசுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |