கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 31 ஆண் தேதி வரை தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையனின் இல்லத்தின் முகப்பு கேட்டில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனின் இல்ல முகப்பு கேட்டில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சாிக்கை நடவடிக்கையின் அடிப்படையில் மாா்ச் 31 ஆம் தேதி வரை தன்னை சென்னையிலும் கோபிசெட்டிபாளையம் இல்லத்திலும் யாரும் சந்திக்க வர வேண்டாம் என அறிவிப்பு பலகை வைத்துள்ளாா்.