10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணைைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாளை கோவையில் வெளியிடுகிறார்.
பள்ளி நாள்காட்டியின்படி, காலாண்டு தேர்வு கடந்த மாதம் நிறைவடைந்து பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு எப்போது நடக்கும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கோவையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று நடப்பு கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு தேதி அட்டவணை மற்றும் செய்முறை தேர்வு அட்டவணையை நாளை (14.10.2024) வெளியிடுகிறார். அதற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வித்துறை செய்துள்ளது.