பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தபின், நிருபா்களிடம் அளித்த பேட்டி,
பள்ளிகளில் ஆய்வுக்கு சென்ற போது, பல கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது. இதில் சிசிடிவி கேமரா கேட்டுள்ளனா. இது முதல்வரிடம் கோரிக்கையாக வைக்கப்படும். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் எல்கேஜி, யுகேஜி அடங்கிய மாதிரி பள்ளிகளை உருவாக்கி வருகிறோம். 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும். அப்போது, தற்போது 12ம் வகுப்பு முடித்து கூடுதல் மதிப்பெண்கள் எடுக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். இது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தால் சாத்தியம். இல்லையென்றால், அந்த நேரத்தில் அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கிறதோ அதன்படி செயல்படும். ஜூலை 31ம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பணிகள் நடக்கிறது. கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் படத்துடன் வழங்கப்பட்ட குறிப்பேடு உள்ளிட்ட நலத்திட்டகளை பொருட்களை மாற்றாமல் வழங்க என்ன மாற்றுவழி உள்ளது என முதல்வரிடம் ஆலோசித்து வழங்கப்படும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5.5 லட்சம் பேர் உள்ளனர். அவர்களது நிலைமையை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது. ஆசிரியராக இருந்தவர்கள் பேக்கரிகளிலும், பெயிண்டராகவும் வேலை செய்யும் வீடியோ பதிவையும் எனக்கு அனுப்பி வருகின்றனர். நிச்சயமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு முதல்வரிடம் பேச உள்ளேன். எந்த கால கட்டத்திலும், நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவிட மாட்டோம். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, முதல்வர் நீட் குறித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார்.