School Education Latest News | பள்ளி கல்வித்துறை நிகழ்ச்சி அமைச்சர் செந்தில் பாலாஜி வருகை
School Education Latest News
தமிழகத்தில்
அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வு இன்று சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலை பள்ளியில் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வில் மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர்.
Read Also: Manarkeni Application Details in Tamil
அப்போது விழா மேடையில், பள்ளி கல்வித்துறையின் விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில், விலையில்லா மிதிவண்டி வழங்குபவர், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி என அவரது புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருந்தது. சமீபத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள இலாகா இல்ல அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இப்படி ஒரு விளம்பர பலகை அச்சடித்தது கல்வித்துறையில் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் அரசியல்வாதிகள், இப்படிதான் பேனர் வைக்க வேண்டும் கல்வி அதிகாரிகளை கட்டாயப்படுத்தினாரா அல்லது அதிகாரிகளே இப்படி ஒரு பேனர் வைத்தனரா என ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
மேலும், வழங்கப்பட்ட இலவச சைக்கிள் தரம் இல்லாத நிலையில் இருந்தது என மாணவிகள் புலம்பினா்.