பள்ளியில் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம், எஸ்எஸ்ஏசி அமைப்பு மற்றும் பள்ளிகளில் கல்விசார், கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவகளிடம் ஒழக்கக்கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுப்பதுடன் தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஒய்வு, பணி நீக்கம், பணியறவு மற்றும் அவர்களின் கல்வி சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் தொடா்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுப்பப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தொடர்பான தகவல்களை அனைத்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்கி கூறுதல் வேண்டும், மாணவர் மனசு பெட்டி 14417 மற்றும் 1098 தொடர்பு எண்கள் அறிந்து கொள்ள விழிப்புணா்வு வழங்குதல் உள்ளிட்ட பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.