அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத தடையின்மை சான்றிதழ் (என்ஒசி) மாவட்ட பள்ளி கல்வித்துறையிடம் பெற வேண்டியதில்லை என்ற குறுஞ்செய்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது அனுப்பப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில், என்ஒசி பெற வேண்டியதில்லை என்ற தகவலை, பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறையாக வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் வாட்ஸப்பில் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், - தற்பொழுது தங்கள் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி ேதர்வு எழுத விண்ணப்பிக்க என்ஒசி பெற வேண்டியது இல்லை என்ற தகவல் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தலைமை ஆசிரியர்கள் என்ஒசி விண்ணப்பங்களை பரிந்துரை செய்து அனுப்ப வேண்டாம். ஆசிரியர்கள் டெட் தேர்வு நேரடியாக விண்ணப்பித்து எழுதி முடித்தபின், தோ்ச்சி பெற்றிருப்பின் அதன் விவரங்கள் சர்வீஸ் ரிஜஸ்டரில் பதிவு செய்யப்பட வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் கூறும்போது, துறையில் ஏதாவது ஒரு தகவல் தெரிவிக்கும்போது, அதிகாரிகள் கையொப்பமிட்டு முறைப்படி செயல்முறைகள் கடிதம் மூலம் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும், இது தான் விதி, அப்போதுதான் ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும். வாட்ஸப்பில் அனுப்பப்படும் தகவல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது, பிற்காலத்தில் ஏதாவது பிரச்னை என்றால், அதிகாரிகளே தப்பித்துக்கொள்வாா்கள், இதுமறுபடியும் டெட் ஆசிரியர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும், இவ்வாறு அவர்கள் கூறினார்.