School Education Department Review Meeting | பள்ளி கல்வித்துறை ஆய்வு கூட்டம்
School Education Department Review Meeting
பள்ளி கல்வித்துறையின் மண்டல ஆய்வு கூட்டம் மதுரை மாவட்டத்தில் வரும் மார்ச் 5ம் தேதி மற்றும் 6ம் தேதி ஆகிய நாட்களில் நடக்கிறது.
பள்ளி கல்வித்துறையில் கற்றல் கற்பித்தல் பணி மற்றும் பல்வேறு இணை செயல்பாடுகள் மற்றும் மன்ற செயல்பாடுகள் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
Read Also: இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இந்த மாவட்டங்களில் மார்ச் 4ம் தேதி அன்று மாவட்ட பள்ளி பார்வையும், 6ம் தேதி முற்பகல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். கீழ் குறிப்பிடும் மாவட்டங்களில் மார்ச் 4ம் தேதி அன்று மாவட்ட பள்ளி பார்வை ஆய்வு நடப்பதால் திங்கட்கிழமை கால அட்டவணையுடன் செயல்படும். இதனை ஈடு செய்யும் வகையில், 13ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படும்.
அதன்படி பள்ளி கல்வி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் மதுரை மாவட்டத்தில் ஆய்வு செய்வார்கள், அறிவொளி திண்டுக்கல் மாவட்டம், குப்புசாமி ராமநாதபுரம் மாவட்டம், நாகராஜமுருகன் சிவகங்கை மாவட்டம், உமா தேனி மாவட்டத்தில் ஆய்வு செய்வார்கள்.
இந்த ஐந்து மாவட்டங்களில் மார்ச் 4ம் தேதி பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.