கொரோனா தொற்று காரணமாக, நீண்ட காலத்திற்கு பின், 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வரும் 19ம் தேதி திறக்கப்பட உள்ளது. பள்ளி தூய்மை பணி, முன்னேற்பாடு பணி உள்ளிட்டவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதுதவிர, வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்பு நடத்த வேண்டும், 25 மாணவர்கள் மட்டுமே வகுப்பில் இருப்பது உள்ளிட்ட உறுதி செய்ய வேண்டும், ஆன்லைன் வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பினால், மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது பள்ளி வருகை நேரம் மற்றும் பள்ளியிலிருந்து வெளிேயறும் நேரம் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள், பள்ளிகளுக்கு வருவதற்கு பெற்றோரின் எழுத்துபூர்வ ஒப்புதல் கடிதம் தேவை, அதனால், பள்ளி திறப்பின் முதல் நாளில் பெற்றோர் தவறாது பள்ளிக்கு வர வேண்டும். அதேபோல், அன்று மாலை மீண்டும் பள்ளிக்கு வந்து மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர, மாணவ, மாணவரின் ஆப்சென்ட் விபரம் மட்டுமே பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி திறந்த பிறகு பள்ளி மாணவ, மாணவிகள் காலை வருகை நேரம், மாலையில் பள்ளியில் வெளியேறும் நேரம் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ் வடிவில் அனுப்பப்படும். இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் மற்றும் அவரது பாதுகாப்பு குறித்து கண்காணிக்கப்படும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.