தமிழக அரசு 9 மற்றும் 11ம் வகுப்புகள் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்த நிலையில் ஆசிாியர் சங்கங்கள் கருத்து தெரிவித்து வருகிறது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தனது முக்கியமான கோரிக்கை ஒன்று வைத்துள்ளது. 9 மற்றும் 11ம் வகுப்பு ,10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசு உயர்நிலை பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டட வசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிகாட்டு நெறிமுறையுடன் 25 மாணவர்கள் அமரும் விதமாக அறைகளில் இருக்கைகள் அமைக்க வேண்டும், இட வசதியில்லாத பள்ளிகளில் சுழற்சி முறையில் அதாவது காலை மற்றும் பிற்பகல் முறையினையும், இல்லையெனில், ஒருநாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கண்டிப்பாக சுழற்சி முறையை கடைப்பிடித்தால் மட்டுமே சமூக இடைவெளி பின்பற்ற முடியும். ஏனெனில், பெரும்பாலான பள்ளிகளில் அரசு அறிவித்திருப்பது போல் ஒரு அறையில் 25 மாணவர்களை அமரவைத்தால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் இட வசதி போதுமானதாக இருக்காது. ஆதலால், அரசு மேல் நிலைபள்ளிகளில் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும், அதாவது, 9, 11ம் வகுப்பு மாணவர்களை ஒருநாளும் மற்றும் 10, 12 வகுப்பு மாணவர்களை அடுத்த நாளும் பள்ளிக்கு வரவைத்தால் வழிகாட்டு நெறிமுறையின்படி சமூக இடைவெளி பின்பற்ற முடியும். இல்லையெனில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை காலையிலும் 9, 11ம் வகுப்பு மாணவர்களை பிற்பகலிலும் வகுப்புகள் நடத்தினால் சமூக இடைவெளியை பின்பற்ற ஏதுவாக இருக்கும். எனவே மாணவர்கள் நலன்கருதி, சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டும் இவ்வாறு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். கல்வித்துறையின் EXCLUSIVE: செய்திகள், தகவல்கள் உடனடியாக அறிய வேண்டும் என்றால், மேலே கொடுக்கப்பட்ட வாட்ஸப், டெலிகிராம் லிங்க் கிளிக் செய்து இணைந்துகொள்ளலாம்.