பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் நிர்வாக காரணங்களால் இரண்டு இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கி இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அரசாணையில் கூறியிருப்பதாவது, ஸ்ரீ தேவி, இணை இயக்குனர் (எஸ்சிஆர்டிஇ), பொன்னையாவுக்கு பதிலாக, இணை இயக்குனர் (உதவி பெறும் பள்ளிகள்), தொடக்க கல்வி இயக்ககத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், இணை இயக்குனா் (அரசு உதவிபெறும் பள்ளிகள்), தொடக்க கல்வி இயக்ககம், பொன்னையாவை, ஸ்ரீ தேவி வகித்து வந்த இணை இயக்குனர் பணியிடத்திற்கு மாற்றம் செய்பப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு தற்போது வழங்கப்பட்டுள்ளது.