தமிழ்நாட்டில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆசிரியர் இல்லாத பணியிடங்கள் தகவல்களை கல்வி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
பள்ளி கல்வி இயக்குனர் கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 8ம் தேதி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் புதியதாக தரம் உயர்த்தப்பட்டுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் வழங்க கோரிக்கை பெறப்பட்டுள்ளது.அதன்படி, 2017-18, 2018-19, 2023-2024 ஆகிய கல்வி ஆண்டுகளில் உயர்நிலை பள்ளிகளில் இருந்து மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வரும் பள்ளிகளுக்்கு கணினி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. ஆனால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி கணினி அறிவியல் மற்றும் கணினி அறிவியல் பயன்பாடுகள் பாடப்பிரிவு நடைபெற்று வருகிறது என தெரியவருகிறது. எனவே, மேற்கண்ட ஆண்டுகளில் தொடங்கப்பட்ட, மேல்நிலை பள்ளிகளில் கணினிப் பிரிவில் பயிலும் மாணவர் எண்ணிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், மாவட்டம், பள்ளி பெயர், யுடைஸ் கோடு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விவரம், உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளிகளில் கணினி ஆசிரியா் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.