பள்ளி கல்வித்துறை நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, நாளை 13.7.2024 (சனிக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வை கடிதத்தில், பள்ளி கல்வி இயக்கக பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் விடுமுறை அறிவிக்கப்படுவதாக புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் (பொ) தெரிவித்துள்ளார்.