தமி்ழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்படும் பள்ளி கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு அதன் விவரத்தை வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் இக்குழுவின் தலைவராக உள்ளார். இதுதவிர, உறுப்பினர்களாக உயர்கல்வி செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளி கல்வி ஆணையர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், அரசு தேர்வுகள் இயக்குனர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், தலைமையாசிரியர்கள உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் பரிந்துரை பேரில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.