தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் கல்வித்துறை - அசந்து தூங்கும் கல்வி அதிகாரிகள்
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்படுவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாள்தோறும் ஏதாவது அறிவிப்பை வெளியிடப்பட்டு வருகிறது. இது ஆசிரியர்கள் மத்தியில் இது எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது, இது ஒரு தேவையில்லாத வெற்று அறிவிப்புகள் என்று தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.
ஆனால், எந்த பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரியாமல், சென்னையில் உள்ள கல்வி அதிகாரிகள் செயல்படுவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, கல்வித்துறை செயலர் முதற்கொண்டு, இணை இயக்குனர்கள் வரை.
பள்ளி கல்வித்துறையின் 2021-2022 கல்வியாண்டு கடந்த மே 13ம் தேதி நிறைவடைந்தது. அடுத்தகட்டமாக, அடுத்த கல்வியாண்டிற்கான ஆரம்ப பணிகள் துவங்க வேண்டும். அதில் ஒன்றுதான் மாணவர் சேர்க்கை. ஆனால், அரசு பள்ளிகளில் எப்போது மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று இதுவரை பள்ளி கல்வித்துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறவிப்பு வெளியாகவில்லை. அதேசமயத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டம், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதே கல்வித்துறை அதிகாரிகள் செயலர் காகர்லா உஷா மற்றும் ஆணையர் நந்தகுமார் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கிணத்தில் போடப்பட்ட கல் போல செயல்படுவதாக அக்கறையுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமா, பெரும்பாலான தனியார் பள்ளிகள் தொடக்க கல்வியான எல்கேஜி, ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை முடித்த நிலையில், 11ம் வகுப்பில் மாணவர்கள் சேர புக்கிங் சிஸ்டம் பரபரப்பாக நடந்து வருகிறது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது, கல்வி அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அரசுபள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று புகழ்வார்கள். அதே சமயத்தில் அரசு பள்ளிக்கு என்ன அடிப்படை தேவையே அதை செய்ய மறுப்பார்கள். குறிப்பாக, மாணவர் சோ்க்கை உரிய நேரத்தில் நடத்தாமல் இருப்பது, அரசு பள்ளிக்கு தேவையான கட்டமைப்புகள் செய்யாமல் இருப்பது, நிரந்தர தூய்மை பணியாளர்கள் நியமிக்காமல் இருப்பது உள்ளிட்டவை.
ஒரு சாதாரண பெற்றோர் இதனை உற்றுநோக்கும்போது, 'காசு செலவானாலும் பரவால்ல, தனியார் பள்ளியிலேயே நம்ம குழந்தையை படிக்க வைக்கலாம்' என்ற மனநிலைக்கு அதிகாரிகள் கொண்டுவந்துவிடுவார்கள். இதனால் பெற்றோர் தனியார் பள்ளி நோக்கி நகர்கின்றனர். அதிகாரிகளே தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிப்பது புரந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், தனியார் பள்ளிகள் நடத்துபவர்கள் அரசியல்வாதிகள், அவர்களின் அடிமையாக செயல்படுவர்கள் இந்த கல்வி அதிகாரிகள். அந்தோ பாவம், அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களினால், கை கட்டி வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும்,
பண பலன்களை தவிர...
அழிவு பாதையில் அரசு பள்ளிகள்...