கடந்த 31ம் தேதி, பள்ளி கல்வித்துறை இணை செயல்முைறகளின் படி, வரும் 10ம் தேதி (நாளைக்குள்) பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டு விழா நிதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
10ம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்த வேண்டும் என உத்தரவிட்ட கல்வித்துறை, பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய அந்த சொற்ப நிதியையும் வழங்கவில்லை என தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, நிதி வழங்கப்படாததால், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணம் மூலமாகவும், உள்ளூரில் நிதி திரட்டியும், ஆண்டுவிழாவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் இன்று ஆண்டுவிழா நடக்க உள்ளது. நிதி இல்லாததால், சில இடங்களில் பெயரளவிலும் ஆண்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த நிலையில், தொடக்க கல்வி அதிகாரி நாளிதழிக்கு அளித்த பேட்டியில், பள்ளிகளுக்கு இன்னும் நிதி விடுவிக்கப்படவில்லை எனவும், நிதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், அந்த அதிகாரி, 10ம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்தி முடிக்க வேண்டியதில்லை எனவும், பள்ளிக்கு நிதி வந்தபின் ஆண்டு விழாவை நடத்தலாம் எனவும் பள்ளி தலைைம ஆசிரியர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.