மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
18.9.2021 மற்றும் 21.9.2021 ஆகிய இரண்டு நாட்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Hi -Tech Lab மூலம் Basic Quiz யினை அனைத்து பாடங்களுக்கும் நடத்த ஆணையிடப்பட்டது. இந்த வினாக்களையும், விடைகளையும் அந்தந்த பாட ஆசிரியர்கள் மாணவர்களுடன் வகுப்பறையில் சரியான விடைகளுக்கான விளக்கத்தினை அளிப்பதுடன், தவறான விடைகளுக்கான காரணத்தையும் மாணவர்கள் எளிதில் புரிந்துடும் வகையில் கலந்துரையாடி, மாணவர்களுக்கு அனைத்து பாட வினா விடைகளை தெளிவுப்படுத்திட வேண்டும். இதுபோல ஒவ்வொரு வாரமும் கலந்துரையாடுதல் பணியினை உரிய பாட ஆசிரியர்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.