மாணவர்களை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்த நிலையில், சத்தியமங்கலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கவுரவு பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மலையடி புதூரில் செயல்பட்டு வரும் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1500 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கௌரவ பேராசிரியராக பணியாற்றி வரும் விபிஏ கல்லூரி பேராசிரியர் பிரேம்குமார் என்பவர் தங்களை தரக்குறைவாகவும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் மாணவ,மாணவிகள் கல்லூாி முதல்வரிடம் புகார் அளித்து வகுப்புகளை புறக்கணித்தனர். தொடர்ந்து கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கௌரவ பேராசிரியர் பிரேம்குமாரை பணியிட நீக்கம் செய்து முதல்வர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் அறிக்கை தாக்கல் செய்து உள்ளார்.