You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பள்ளி சுகாதாரம் மெத்தனம் காட்டும் கல்வித்துறை

Coimbatore HM Sexual Harassment

பள்ளி சுகாதாரம் மெத்தனம் காட்டும் கல்வித்துறை

தமிழக பட்ஜெட்டில் அதிகப்படியான நிதியை தமிழக அரசு கல்வித்துறைக்கு ஒதுக்குகிறது. ஆனாலும், கல்வி அமைச்சரும், கல்வி அதிகாரிகளும் அரசு பள்ளி அடிப்படை விஷயங்கள் தவிர அந்த திட்டம், இந்த திட்டம் என பட்டியலிடுகின்றனர். ஆனால், பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு விஷயங்களில் மெத்தனமாக இருப்பது நிதர்சனம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, கல்வியாளர்கள் பள்ளி சுகாதாரம் சுகாதாரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று கோரிக்கை வாயிலாக கல்வித்துைறக்கு அனுப்பியுள்ளனர். அதன் விவரம்: 

சுகாதாரம்

பள்ளிக்கு ஒரு துப்புரவுப் பணியாளர் மட்டும் நியமித்தால் ஒரு பணியாளரால் பள்ளி வளாகம், கழிப்பறைகள், வகுப்பறைகள் எல்லாவற்றையும் ஒரே நாளில் துப்புரவு செய்ய முடியாது. ஒவ்வொரு பள்ளிக்கும் கழிப்பறைத் துப்பரவாளர், வளாகத் துப்புரவாளர், வகுப்பறைத் துப்புரவாளர் என்ற வகையில் மூன்று பணியாளர்கள் தேவை. 

கழிப்பறைத் துப்பரவாளர் முழு நேரப் பணியாளராகவும் வளாகத் துப்புரவாளர் மற்றும் வகுப்பறைத் துப்புரவாளர் ஆகியோரை பகுதி நேரமாகவும் நியமிக்கவேண்டும். கழிப்பறைத் துப்புரவுப் பணியாளருக்கு சுகாதாரப் பாதுகாப்புக் கருவிகள் வழங்கவேண்டும். 

Also Read This: பள்ளி சுகாதாரம் எவ்வாறு திறம்பட பராமரிப்பது?

துப்புரவுப் பணியாளர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நாள் ஊதியத்தைவிடக் கூடுதலான நாள் ஊதியம் வழங்கவேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டப் பணியாளர்களை வளாகத் துப்புரவு, வகுப்பறைத் துப்புரவுப் பணிக்கு சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளி வளாகத்தின் பரப்பளவு, வகுப்பறைகளின் எண்ணிக்கை கழிப்பறைகளின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு ஏற்ப துப்புரவுப் பணியாளர் எண்ணிக்கையை நிர்ணயிக்கவேண்டும். மாணவிகள் கழிப்பறைக்கு பெண் துப்புரவுப் பணியாளரை நியமிக்கவேண்டும். 

துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் நேரடியாக உள்ளூர் உள்ளாட்சி நிர்வாக அலுவலர் மூலம் வழங்கவேண்டும். தலைமை ஆசிரியர்களை ஊதியம் பெற்று வழங்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்கவேண்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கான வருகைப் பதிவேடு மட்டும் தலைமை ஆசிரியரால் பராமரிக்கப்பட வேண்டும்.  

துப்புரவுப் பொருள்கள் வாங்குவதற்கான நிதியை மாதந்தோறும் பள்ளிகளுக்கு வழங்கி தலைமை ஆசிரியர் மூலம் பொருள்கள் வாங்குவது தவிர்க்கப்படவேண்டும். பள்ளிக்கான துப்புரவுப் பொருள்கள் உள்ளாட்சி நிர்வாக அலுவலகம் மூலம் பள்ளிகளுக்கு மாதந்தோறும்  வழங்கப்படவேண்டும். கழிப்பறைத் துப்புரவுப் பணியாளரை முழு நேர காலமுறை ஊதியப் பணியாளராக நியமிக்க வேண்டும்.