You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

மாரிவளவு பள்ளி ஆசிரியை மஞ்சுளாவுக்கு நல்லாசிரியர் விருது

Salem teacher Manjula

ஒவ்வொரு ஆண்டும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை, நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளில்  சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் வட்டாரத்தில் உள்ள மாரி வளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியை பெ.மஞ்சுளா சிறப்பான கல்வி செயல்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் 2026-2027 கல்வி ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். சென்னையில் நடந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் அவர் இந்த விருதை பெற்றுக்கொண்டார். 

மாரிவளவு கிராமத்தில் அமைந்துள்ள இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியை மஞ்சுளா ஆகியோர் பணியாற்றி வருகிறார். சுமார் 30 குழந்தைகள் படிக்கின்றனர். கல்வித்தான் முக்கியம் என கருதி, பல ஆசிரியர்கள் குழந்தைகைள கற்றல் பாதையை மட்டும் நோக்கி அழைத்து செல்லும் நிலையில,  அவ்வாறு அல்லாமல், மாணவர்களின் மனநலம், உடல்நலம் கருத்தில்கொண்டு அவர்களுக்கு யோகா மற்றும் விளையாட்டு கற்பித்து, அதன்மூலம் கல்வியை பயிற்றுவருகிறார்.

மேலும் அவர் கூறும்போது, வெறுமனே பாடம் மட்டும் நடத்தும்போது, பல குழந்தைகள் கல்வியல் ஆா்வம் இல்லாமல் உள்ளதாகவும், ஏதாவது ஒரு விளையாட்டுடன் சேர்த்து பாடம் கற்பிக்கும்போது, மாணவர்களுக்கு ஆர்வத்துடன் கல்வி கற்கிறார்கள், என்றார். 

குறிப்பாக, பாட புத்தகம் மட்டுமின்றி, அதன் கல்வி செயல்பாடுகள் நேரடியாக வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்பித்து, பாடங்களின் விளக்கங்களை கற்றல் செயல்பாடுகள் மூலம் கற்பித்து வருகிறார். 

அதன்படி யோகா மற்றும் சில விளையாட்டுகளில் குழந்தைகளில் ஈடுபடுத்தி, பாடம் நடத்தி வருகிறார். மேலும், பள்ளி சீருடைக்கு பதிலாக, குழந்தைகளுக்கு வண்ணமயமான ஆடைகளை வழங்கி, யோகா பயிற்றுவிக்கிறார்.  இதற்கான ஒவ்வொரு வருடமும் சொந்த செலவில் பணம் செலவழித்து மாணவர்களுக்கு ஆடையும் வழங்கி வருகிறார். 

இதுதவிர, பள்ளி மேம்பாட்டிற்காகவும், கற்றல் செயல்பாட்டிற்காகவும் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார். 

இதனை தொடர்ந்து, கல்வி உயர் அதிகாரிகள், சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் ஆசிரியர் மஞ்சுளாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.